Thursday, September 22, 2011

Heavenletter #3939: What More Can God Say?: Tamil Verses

Let Me come to the fore of your life. There is no better company than I.

இறையெனை உன்வாழ்வுக் களம்முன் அனுமதி
இணையிலா உன்நற்றுணை நான்

No matter what, I am your Friend. There is no other like Me.

ஏது நேரினும் நின்னுயிர் நட்புநான்
ஈடு இணையிலை எனக்கு

There is nothing you can do to prove that I do not love you. There is nothing that can happen to you that disproves My love. Try as you may to disbelieve in My love, My love will course through your disproval of Me, and nor does your approval buy you points.

உண்டு என்பதால் மகிழ்வனோ இறைநான்
இல்லை என்பதால் அழிவனோ சிவம்நான்
வாதம் யாவுங் கடந்ததாம் ஒன்றேநான்
தாழ்கள் தகர்த்துப் பாய்ந்திடும் அன்பே நான்

We can say that from the top of the mountain, I see all and know all and love all.

தேவமலை உச்சியில் இருந்துநான் யாவும்
நேசிக்கிறேன் அறிகிறேன் காண்கிறேன்

You see loss, and I see Truth. In Truth, there is no loss.

நீயோ நட்டம் பார்க்கிறாய் நான்நட்ட
மாகா உண்மை பார்க்கிறேன்

Your vision lacks what your heart deep down knows.

ஊனக் கண்நினது பாராது இருதய
ஞானக் கண்தான் அறிவது

What is true never leaves.

What is false never was.

உள்ளதாம் உண்மை என்றும் விலகாது
இல்லவே இல்லை பொய்ம்மை

முழு சொர்க்கக் கடிதத்தின் சுட்டி கீழே, தவறாமல் படியுங்கள், நன்றி
http://www.heavenletters.org/what-more-can-god-say.html

1 comment:

Gloria Wendroff said...

So beautiful! Great choices of quotations. And the Tamil verses are powerful. I do not know Tamil, and I feel something powerful from just looking at them.

Thank you, thank you.